Thursday, November 20, 2008

உனக்கும் பிடிக்கும்.

உன் சிரிக்கும் மென் இதழ் எனக்கு பிடிக்கும்
என் உயிரை கொல்லும்
உன் கண் பார்வை எனக்கு பிடிக்கும்
கார்மேகத்தையும் கலங்கவைத்த‌
உன் கூந்தல் எனக்கு பிடிக்கும்
பார் உலகில் படாமல் பறக்கும்
உன் பாதங்கள் எனக்கு பிடிக்கும்
சின்னச் சிறு வண்டுகளும் வருடும்
உன் பூ விரல்கள் எனக்கு பிடிக்கும்

எனக்கு தெரியும் நான் பொய்
சொல்வது
உனக்கு பிடிக்கும்..

ஆண் நிலா

நிலவுக்கும் உண்டு காதல் நோய்
அம்மாவாசை என்னும் ஃபிகரால் தேய்ந்து
அடுத்த பௌர்ணமி என்னும் ஃபிகரால்
வளர்ந்து வருகிறது. ‍

Saturday, November 15, 2008

கவிதை

முடியாத கவிதையாய் நான் உன்னால்...
நீ முடித்து வைப்பதற்காக இல்லை
நான் முடித்து கொள்வதற்காக!